சீனா, சொந்தமாக அமைக்கும் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 3 வீரர்களுடன் அதிபர் நேரடியாக கலந்துரையாடியுள்ளார்.
சீனா தற்போது சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அந்த விண்வெளிக்கு வீரர்கள் மூவரை கடந்த 17ஆம் தேதியன்று அனுப்பியது. இந்நிலையில் நேற்று அதிபர் ஜின்பிங், அந்த வீரர்களுடன், முதல் தடவையாக, பீஜிங்கில் இருக்கும் விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, விண்வெளி நிலையத்தில், நீங்கள் மூன்று மாதங்கள் இருப்பீர்கள். அங்கு நீங்கள் மேற்கொள்ளும் பணியும் உங்களது வாழ்வும் நாட்டு மக்களின் நெஞ்சங்களில் இருக்கும், நாம் தனியாக விண்வெளி நிலையத்தை அமைப்பது ஒரு முக்கியமான மைல்கல், என்று கூறியுள்ளார்.
வீரர்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகளை கூறியுள்ளார். சுமார் 5 நிமிடம் இந்த உரையாடல் நடந்துள்ளது. இது சீனாவின் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த வீரர்கள் மூன்று மாதங்களுக்குள், தியாங்காங் ஹெவன்லி பேலஸ் என்ற இந்த விண்வெளி நிலையத்தை அமைத்துவிடுவார்கள்.