Categories
உலக செய்திகள்

சீனா இந்த முயற்சியை ஒருபோதும் கையில் எடுக்காது..! மாநாட்டில் பேசிய அதிபர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆசியன் மாநாட்டில் கலந்து கொண்ட சீன அதிபர் ஜின்பிங் தங்கள் நாடு தென்கிழக்கு ஆசியா மீது அதிகாரத்தை செலுத்தாது என்று கூறியுள்ளார்.

சீனா, தென்கிழக்கு ஆசியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து வருவதாக ஏனைய நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் மற்ற நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே தென்சீன கடல் விவகாரத்தில் பல வருடங்களாக மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவுக்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்திற்கும் இடையே காணொளி காட்சி வாயிலாக 30 ஆண்டு கால உறவை குறிக்கும் வகையில் நடைபெற்ற மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்றுள்ளார்.

இந்த மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜின்பிங், சீனா தென்கிழக்கு ஆசியா மீது தனது அதிகாரத்தை செலுத்தாது என்று உறுதி அளித்துள்ளார். மேலும் சீனா அண்டை நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தவும், பிராந்தியத்தின் நிலையான அமைதியை பேணி காக்கவுமே விரும்புகிறது. எனவே சீனா தென்கிழக்கு ஆசியாவில் தனது அதிகாரத்தை செலுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாது என்று அதிபர் ஜின்பிங் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Categories

Tech |