சைனீஸ் ப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி- 500 கிராம்
சுத்தம் செய்யப்பட்ட இறால்- 300 கிராம்
பீன்ஸ்- 100 கிராம்
முட்டை- இரண்டு
மிளகு தூள் -ஒரு தேக்கரண்டி
பூண்டு- 3 பல்
அஜினமோட்டோ- அரை தேக்கரண்டி
எண்ணெய் -மூன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
உப்பு- ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கப்
கிராம்பு- 4
ஏலக்காய்- 4
செய்முறை
அரிசியை கழுவி அதனுடன் ஏலக்காய் கிராம்பு கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். அப்போது தான் சாதம் உதிர் பதமாக இருக்கும் இறாலை சிறிய துண்டுகளாக நறுக்கி கால் தேக்கரண்டி உப்பு மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும் முட்டையை உடைத்து ஊற்றி அதில் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து அப்பமாக பொரித்து எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டை தட்டிப் போட்டு பிரட்டி வைத்திருக்கும் இறாலை போட்டு நன்கு வதக்கவும். இறால் நன்கு வதங்கியதும் அதனுடன் பீன்ஸை போட்டு வதக்கவும் அதன் பின்னர் கறிவேப்பிலை மீதமுள்ள உப்பு மிளகுத்தூள் அஜினமோட்டோ போட்டு பிரட்டி விடவும். அதிகம் சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும் சிறிதளவு அதிகமான புளிப்பு தன்மை அதிகமாகிவிடும் இந்தக் கலவையில் வேக வைத்து ஆற வைத்த சாதத்தையும் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முட்டை களையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு பிரட்டி விட்டு சூடானதும் இறக்கி சமைத்து முடியும் வரை குறைந்த தீயில் வைக்கவும்.
இப்போது சுவையான சைனீஸ் ப்ரைட் ரைஸ் ரெடி