ஆஸ்திரேலியா, சீன நாட்டின் உளவு கப்பல், தங்களது கடல் எல்லைக்கு அருகில் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்திருக்கிறது.
ஆஸ்திரேலிய நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கும் புரூம் நகரத்திற்கு அருகில் கடல் பகுதியில் சீன நாட்டின் உளவு கப்பல் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அரசு இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இதுபற்றி, ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான ஸ்காட் மாரிசன் தெரிவித்திருப்பதாவது, சீன நாட்டின் கப்பல் தங்கள் நாட்டு கடல் எல்லைப் பகுதிக்குள் வரவில்லை. ஆனால், உளவு பார்க்கும் நோக்கத்தோடு தான் அங்கு வந்திருக்கிறது என்பது உறுதியாகிறது என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பில், தற்போது வரை சீனா எந்தவித அதிகாரப்பூர்வ பதிலையும் தெரிவிக்கவில்லை.