Categories
உலக செய்திகள்

12 மணி நேரமும் இதுதான் கதி..! தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வேலை… சீன ஊழியர்கள் பிரச்சாரம்..!!

சீனாவில் ஊழியர்கள் 12 மணி நேர வேலையை எதிர்த்து Workers lives matters என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

சீனாவில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலான வேலை நேரத்தை எதிர்த்து பல நிறுவனங்களிலும் ஊழியர்கள் Workers lives matters என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். சீனாவில் பல நிறுவனங்களில் தினமும் 12 மணி நேரம், வாரத்தில் ஆறு நாட்கள் 996 என்றழைக்கப்படும் வேலை திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் சீனாவின் பிரபல நிறுவனங்களான ByteDance, Tencent உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஷிப்ட் கணக்கில் 12 மணி நேரம் வேலை பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஊழியர்கள் பலரும் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட இயலாமல் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே Workers lives matters என்ற பிரச்சாரத்தை ஊழியர்கள் ஆரம்பித்துள்ளனர்.

Categories

Tech |