முக்குலத்தோர் புலிப்படை சின்னமாவுக்கு ஆதரவாக இருக்கும் என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை இடையிடையே அதை விசாரித்துக் கொண்டிருந்த நீதியரசர்கள் அதிலிருந்து விலகி இருக்கிறார்கள். இப்பொழுது புதிதாக ஒரு நீதி அரசர் அதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த அடிப்படையிலேயே எங்களுடைய கோரிக்கையை அன்றுமுதல் இன்று வரை நடிகர் சங்கத்தில், நான் சார்ந்துள்ள பாண்டவர் அணி சார்பான கோரிக்கை என்னவென்று சொன்னாள். நடந்து முடிந்த தேர்தல் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடந்து முடிந்தது.
அந்த தேர்தலினுடைய விதிப்படி, நியாயப்படி, மனசாட்சியின்படி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த வாக்குகள் என்ன பட வேண்டும். அந்த வாக்குகளினுடைய அடிப்படையிலே வெற்றி பெற்றவர்களுக்கு பதவி பிரமாணம் அறிவிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதே நோக்கித்தான் எங்களுடைய பயணம். என்னைப்பொறுத்தவரை நான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்தவர் என்று அடிப்படையிலே சின்னம்மா அவர்களுக்கு என்றைக்கும் முக்குலத்தோர் புலிப்படை உறுதுணையாக இருக்கும் என்று கருணாஸ் தெரிவித்தார்.