வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விளையாட்டுத் துறையின் மீது அந்த அளவுக்கு அதிகப்படியாக கவனத்தை செலுத்துகின்ற அரசாங்கம் நம்முடைய தளபதி அரசாங்கம் விளங்கிக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற வருகை தருகின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதுமட்டுமல்ல எங்களை பொறுத்த வரைக்கும் முதல் பரிசு வாங்குறோம், இரண்டாவது பரிசு வாங்குறோம் என்பதை காட்டிலும், போட்டியில் பங்கு பெறுகின்ற அனைவருமே வெற்றி பெற்றவர்களாக கருதக்கூடியவர்களாக மகிழ்ச்சியோடு நாங்கள் வருகை தந்து இருக்கின்றோம். தொடர்ந்து அண்ணன் ”தாயகம் கவி” அவர்கள் இது போல நம்முடைய இளைஞர்ணி செயலாளர் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாட வேண்டும். ஏனென்றால் அவரும் இளைஞர்ணியில் இருந்து வந்தவர் தான்.
நானும் இளைஞர்ணியில் இருந்து வந்தவன் தான். எங்களுக்கு அன்றைக்கு வழிகாட்டியாக இருந்தவர் நம்முடைய இயக்கதின் தலைவர், அன்றைக்கு செயலாளராக இருந்தார். அவருக்கு பிறகு நம்முடைய இளைஞர்ணி செயலாளர் நம்மை வழிநடத்தினார். வருகின்ற காலத்தில் இளைய சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக வழிநடத்துகின்ற சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நம் அனைவரின் சார்பாக நம்முடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, அவர் பல்லாண்டு காலம் வாழ்க, வாழ்க, வாழ்க என்று சொல்லி, வாழ்க தலைவர், வெல்க தமிழர், வளர்க திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன் என தெரிவித்தார்.