தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சின்னி ஜெயந்த் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழில் ” கை கொடுக்கும் கை” என்ற படத்தில் அறிமுகமாகிய சின்னி ஜெயந்த் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இவருடைய மகன் ஸ்ருஜன் ஜெய் இந்தியாவிலேயே எழுபத்தைந்தாவது இடம்பிடித்தது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமல் தொலைபேசி வழியாக சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருஜன் ஜெய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பெற்றோரை பெருமைப்படுத்தியதற்காக தானும் பெருமைப்படுவதாக ரஜினி கூறியுள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு இல்லாமல் இருந்திருந்தால் வீட்டிற்கே நேரடியாக வந்து வாழ்த்தி இருப்பேன் என தெரிவித்துள்ளார்.