Categories
சினிமா தமிழ் சினிமா

சிரஞ்சீவி “காட் பாதர்”….. இவ்வளவுதான் வசூலா?…. வருத்தம் தெரிவித்த தெலுங்கானா பாக்ஸ் ஆபீஸ்….!!!!

மலையாளத்தில் மோகன்லால் அடித்து சூப்பர் ஹிட்டான படம் லூசிபர். இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க “காட் பாதர்” என்ற பெயரில் ரீமிக்ஸ் செய்து நேற்று வெளியானது. இந்த படத்திற்கு நேற்று நல்ல விமர்சனங்கள் வந்தது. ஆனால் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என்று தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. உலக அளவில் ரூ.38 கோடியும், தெலுங்கு மாநில ஆந்திரா தெலுங்கானாவில் ரூ.20 கோடி மட்டுமே இந்த படம் வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கான உலக அளவிலான தியேட்டர் வியாபாரம் ரூ.90 கோடி வரை நடந்துள்ளது. எனவே ரூ.120 கோடி வரை வசூலித்தால் மட்டுமே இந்த படம் வெற்றி படமாக அமையும்.

அதனை தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டதால் சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார் சிரஞ்சீவி. அதன் பிறகு விஜய் நடித்த தமிழில் வெளிவந்த கத்தி படத்தின் மூலம் தெலுங்கு ரீமேக் காண “கைதி நம்பர் ஒன்” மூலம் மீண்டும் வெற்றிகரமாக ரீ‌ என்ட்ரி ஆனார். இருப்பினும் அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த படங்கள் பிரமாண்டமாக தயாரானாலும் வெற்றி படங்களாக அமையவில்லை. சைத்தான் நரசிம்ம ரெட்டி, ஆச்சாரியா ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை தான் தழுவியது. இதனையடுத்து காட்பாதர் படத்திற்கு பாசிட்டிவாக விமர்சனங்கள் வந்தாலும் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் முதல் நாள் வசூல் குறைவாக இருப்பது கவலையை அளித்துள்ளது. மேலும் ரீ என்ட்ரி பிறகு வெளிவந்த சிரஞ்சீவி படங்களில் இந்த படம் தான் தெலுங்கு மாநிலங்களில் குறைவான வசூலை கொடுத்துள்ளது.

Categories

Tech |