தமிழகத்தில் ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 6 இடங்களில் 4 திமுகவும், 2 அதிமுகவும் எளிதில் வெற்றி பெறும். மேலும் 1 இடத்தை திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் மற்றொரு இடத்தை காங்கிரசுக்கு கொடுப்பதற்கு திமுக ஒத்து கொண்டதகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த 2016ஆம் ஆண்டு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மஹாராஷ்டிராவில் ராஜ்யசபா எம்.பி ஆனார். இவரது பதவிக்காலம் வருகிற ஜூலை 5ஆம் தேதி முடிய உள்ள நிலையில் வேறொரு மாநிலத்திற்கான எம்.பி பதவியை அம்மாநில காங்கிரஸ் இவருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் சிதம்பரம் மீண்டும் எம்.பி ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் ராஜ்யசபா எம்.பியாக சிதம்பரம் முயற்சி செய்து வருகிறார். இதற்காக சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மு.க ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டத்தில் அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார். இதனால் எப்படியும் பதவி கிடைத்து விடும் என்று நம்பிக்கையோடு இருந்த சிதைப்பதற்கு கேரளாவில் ராகுல் எடுத்த முடிவு அதிர்ச்சியை அளித்துள்ளது. என்னவென்றால் கேரளாவில் மூத்த தலைவர்கள் பலர் அந்த பதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற வேலையில் மகளிர் காங்கிரஸ் மாநில தலைவரான இளம்பெண் ஜெபி மேத்தருக்கு ராகுல்காந்தி அப்பதவியை வழங்கிவிட்டார். இந்த செயல் சிதம்பரத்திற்கு ‘செக்’ வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராகுல் காந்தி இதேபோன்று தமிழகத்திலும் இளைஞர் ஒருவருக்கு இப்பதிவியை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் மஹாராஷ்டிரா மாநிலம் தேர்தல் பொறுப்பாளராக இருந்த சிதம்பரம் சோனியா, ராகுல், பிரியங்காவிடம் கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து காட்டுகிறேன் என்று உறுதி அளித்திருந்தாராம். ஆனால் காங்கிரஸ் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட குறைவான இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் அதிருப்தியில் இருந்த சோனியா, ராகுல் இருவரும் சிதம்பரத்துக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவியை அளித்து அவரை ஓரம்கட்ட திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.