சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து இறைவனை வழிபட்டால் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நம்மிடம் உள்ள வறுமை நீங்கி புண்ணியங்கள் சேரும். திருமணத்தடை அகன்று குழந்தை பாக்கியம் உண்டாகும். இன்றைய தினம் அதிகாலை எழுந்து பூஜையறையில் விநாயகர் படத்தை வைத்து அதன் அருகில் ஒரு பேப்பரில் சித்திரகுப்தர் படி அளப்பு என்று எழுதி வைக்கவேண்டும்.
சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் அன்பான நாளாகும். தாயாரை இழந்தவர்களுக்கு தர்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீக்கும் விரதமாகவும் இது அமைகின்றது. அம்மனுக்கு மரிக்கொழுந்து அர்ச்சனை செய்தால் நமக்கும் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
அன்றைய தினம் முழுவதும் உணவருந்தாமல் நீராகாரம் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி தேங்காய் உடைத்து தூப தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். நெய்வேத்தியமாக பொங்கல் படைத்து வழிபடுவது சிறப்பு. விரதம் இருக்க முடியாதவர்கள் உப்பில்லாத உணவை உண்ணலாம். நாள் முழுவதும் சித்திர குப்தரின் நாமத்தை ஜெபிப்பது நல்லது.
சித்ரா பௌர்ணமி விரதத்தைக் முழுமையாக இருப்பவர்கள் இரவு சித்திரை நிலவு பார்த்த பிறகு உணவு உண்டு விரதத்தை முடிக்கலாம். பவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அன்னதானம் செய்தால் கல்வி, வேலை, ஆரோக்கியம், திருமணம், குடும்பம் பிரச்சனை அனைத்தும் நீங்கி நம் வாழ்வில் மேன்மை உண்டாகும். இந்த சிறப்பான நாளை தவறவிடாமல் முறையாக விரதம் இருந்து இறைவனின் அருளை பெறுவோம்