சின்னத்திரை நடிகை சித்ரா கையில் காயத்துடன் இருக்கும் பழைய புகைப்படத்தில் அவரது ரசிகர் ஒருவர் கவனித்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் முக்கிய தொடரான பாண்டியன் ஸ்டோர்-சில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த VJ சித்ராவுக்கு என்று மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சித்ரா விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த செய்தியை கேட்டு தமிழ் திரையுலகமே பெரும் அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில் சித்ராவின் பழைய புகைப்படம் ஒன்றை அவரது ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவரது கையில் இருக்கும் காயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அந்த பதிவில், ” யாராவது கவனித்தீர்களா? சித்துவின் கையில் காயம் இருக்கிறது. எங்கள் அக்காவை அவன் அடித்துருக்கிறான்” என்று கூறிவிட்டு ஹேம்நாத்தை திட்டியுள்ளார். இதனை பார்த்த சித்ராவின் ரசிகர்கள் ஹேம்நாத்தின் மீது ஆத்திரத்தில் இருக்கின்றனர்.
https://www.instagram.com/p/CMl0juqBkgu/