சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக 250 பக்க விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தனியார் ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கடந்த 14ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சித்ராவின் மர்ம மரணம் மர்மமாக இறந்த நிலையில் ஆர்டிஓ திவ்யாஸ்ரீ இன் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் அவரும் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேகப்படும் அனைவரிடமும் விசாரணை நடத்தினார்.
சித்ராவின் குடும்பத்தினர் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இடையே விசாரணை நடைபெற்றது. தற்கொலை செய்துகொண்ட ஹோட்டல் பணியாளர்கள், மேலாளர்கள் என இதுவரை நான்கு கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்தாவது கட்டமாக சித்ராவின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த ஆனந்த் என்பவரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் 250 பக்க அளவில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் சித்ராவின் தற்கொலை வரதட்சணை கொடுமை காண முகாந்திரம் இல்லை என தெரியவந்துள்ளதாக கோட்டாட்சியர் அலுவலகம் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த விசாரணை அறிக்கையை பூந்தமல்லி உதவி ஆணையர் சுதர்சன் இடம் வரும் திங்களன்று தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.