நடிகை சித்ராவின் ஆவியோடு பேசியதாக சார்லி என்பவர் கூறியுள்ளது பெரும் திகிலை கிளப்பியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ஆன சித்ரா தன்னுடைய கணவருடன் ஓட்டலில் தங்கி இருந்த நிலையில் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணம் தற்கொலைதான் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக வருங்கால கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவருடைய மரணத்தில் மர்மங்கள் குறைந்தபாடில்லை.
அதன்படி தற்போது இணையத்தில் ஆவிகளோடு பேசும் முக்கிய நபர்களில் ஒருவரான சார்லி தத்தேன் தன் வெளியிட்டுள்ள வீடியோவில், சமீபத்தில் தான் சித்ராவின் ஆவியை சந்தித்ததாக வெளியிட்டார். அந்த காணொளியில், தொடக்கத்தில் அவர் பேசியது சித்ராவின் ஆவியோடு தான் என குரலை காண்பதற்கு முன்பே இவருடைய செய்திகளை திகிலை கிளப்பியுள்ளன. சித்ரா ஆவியோடு பேச தொடங்கிய அவர் உங்கள் ரசிகர்கள் மற்றும் குடும்பத்துடன் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு சித்ரா கூறிய பதில் சரியாக கேட்கவில்லை.
அதன் பின்னர் உங்கள் மரணம் பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு சித்ராவின் ஆவி அதைப் பற்றி பேச விரும்பவில்லை. தற்போது நான் தனியாக உணர்கிறேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். தற்போது எவ்வளவுதான் முன்னேற்றங்கள் வந்தாலும் இதுபோன்ற வதந்திகளை ஏற்றுக்கொள்ளும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் ஆவிகளோடு பேசியதை ஏற்றுக்கொள்ள சற்று தயக்கமாக தான் இருக்கிறது.