சித்ராவின் புகைப்படத்திற்கு அவரது தந்தை கேக் ஊட்டும் வீடியோ காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விஜே சித்ராவின் பிறந்த நாளை நேற்று அவர் பெற்றோர்கள் கொண்டாடியுள்ளனர். அப்போது அவரது தந்தை மகள் சித்ராவின் புகைப்படத்திற்கு கேக் ஊட்டும் வீடியோ காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.