Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்ராவின் மரணம்” அடிப்படும் அமைச்சரின் பெயர்… தொடர்ந்து நீடிக்கும் மர்மம்..!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் ஒரு அமைச்சரின் பெயர் அடிப் படுவதாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் நடந்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் படப்பிடிப்பில் தினமும் பங்கேற்று விட்டு திருவான்மியூரில் உள்ள வீட்டிற்கு சென்று வர முடியாத காரணத்தினால் நசரத்பேட்டை அடுத்த பழஞ்சூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். சித்ராவுக்கும், பூந்தமல்லி அருகே இருக்கும் கரையான்சாவடியை சேர்ந்த ஹேம்நாத் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவரும், சித்ரா உடன் அந்த ஓட்டலில் தான் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டு சித்ரா அறைக்கு வந்துள்ளார்.

காரில் ஒரு பொருளை மறந்து வைத்துவிட்டேன் என்றும், அதனை சென்று எடுத்து வாருங்கள் என்று ஹேம்நாத் இடம் கூறியதாக அவர் தெரிவித்தார். அறையை விட்டு வெளியேறியதும் சித்ரா அறையின் கதவை சாத்திக் கொண்டார் என்று ஹேம்நாத் கூறியுள்ளார். ஹோட்டல் நிர்வாகத்திடம் சொல்லி மற்றொரு சாவியைக் கொண்டு திறந்து பார்த்தபோது சித்ரா பட்டுப்புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது கணவர் என தெரிவித்தார். ஆனால் சித்ராவின் தாயார் தனது மகளை ஹேம்நாத் தான் அடித்துக் கொன்றுவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சித்ராவின் மரணத்தில் நிலவும் மர்மம் குறித்து விசாரித்து வரும் போலீசார் அந்த ஓட்டலில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தமிழக அமைச்சர் ஒருவரின் கார் அடிக்கடி வந்து செல்வது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த அமைச்சர் யார்? எதற்காக அவர் நள்ளிரவில் ஓட்டலுக்கு வந்து செல்கிறார் என்பது குறித்து போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர். செல்வாக்கான அமைச்சர் ஒருவர் அடிக்கடி சென்னை புறநகரில் உள்ள ஓட்டல்களில் நடிகைகளுடன் தங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவர் தான் வந்தாரா? அல்லது வேறு ஏதாவது அமைச்சர் வந்தாரா? என்பதை போலீசார் கவனமுடன் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |