நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் இறக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் 9ஆம் தேதியன்று நட்சத்திர ஓட்டலில் தன்னுடைய கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அடிப்படையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து ஸ்ரீபெரும்புதுார் ஆர்டிஓ திவ்யஸ்ரீ கடந்த 14ஆம் தேதி முதல் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். முதல் கட்ட விசாரணை சித்ராவின் பெற்றோர், சகோதரர், உறவினர் என அனைவரிடமும் நடத்தப்பட்டது.
சித்ராவுடன் நடித்த டிவி சீரியல் நடிகர், நடிகைகள் சித்ரா மற்றும் ஹேமந்த் ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள் ஆகியாரிடமும் நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து திவ்யஸ்ரீ தன்னுடைய அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்துள்ளார். விசாரணையின் அறிக்கையை வரதட்சனை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. சித்ராவின் தற்கொலை வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் பல புதிய தகவல்கள் மற்றும் திருப்பம் வருமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.