மேஷம் ராசி சித்திரை மாத பலன்: அசுவதி, பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு இந்த மாத ராசிபலன்களின் அடிப்படையில் நிகழும் மங்களகரமான சார்வரி வருடம். இந்த வருஷத்திற்கு சார்பரி வருஷம் என்ற பெயர். தமிழ் வருடப்பிறப்பு புத்தாண்டு பலன்கள் சார்வரி வருடம் சித்திரை மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்.
மேஷ ராசிக்கு என்ன பலன்கள்.
சந்திராஷ்டம தினங்கள்
வணங்க வேண்டிய தெய்வங்கள்
அதிர்ஷ்ட, எண்கள், திசைகள்
மேஷராசிக்கு அதிதேவதை அதிபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவானும், முருகப்பெருமானும் ஆவார்கள். அதனால் அவர்களை பிரார்த்தனை செய்து எப்பொழுதுமே மேஷம், விருச்சிகம் இரண்டு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வம் ஆகும். எனவே அவரை பிரார்த்தனை செய்து இந்த மாத நிகழ்ச்சிகளுக்கு செல்லலாம். மேஷ ராசியில் சூரியன் உச்சமாக இருப்பார். சூரியன் உச்சம் பெறும் பொழுது சித்திரை மாதத்தில் சூரியன் அதிபதி. அதாவது வருடபிறப்பு அப்பொழுது சூரிய பகவான் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பல நன்மைகள் ஏற்படும்.
அரசு உத்தியோகம், அரசு தொழில், அரசு சார்ந்த தொழில், காண்ட்ராக்ட் தொழில், அரசியல்வாதிகள், அரசு மருத்துவர்கள் நிறைய சம்பந்தமான டாக்டர்கள் இவர்களுக்கு சிறப்பான யோகம் உண்டு. பதவி உயர்வு உண்டாகும், பணி உயர்வு உண்டாகும், சம்பள உயர்வு உண்டாகும். மேஷ ராசியில் பிறந்த நேயர்கள் உடைய தகப்பனாருக்கு இருந்து வந்த நோய்கள் நிவர்த்தியாகும். மருத்துவச் செலவுகள் குறையும். தகப்பனார் வழி சொத்துக்கள் வந்து சேரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்வீகச் சொத்துகளால் லாபம், சிலபேர் பித்ரு தோஷ பரிகாரங்கள் இதையெல்லாம் செய்து கொள்வது,
குலதெய்வ வழிபாடு செய்து கொள்வது போன்றவை இந்த மாதத்தில் சிறப்பாக அமையும். ராசிக்கு இரண்டாம் இடத்தில் பார்க்கும்பொழுது; சுக்கிரன், குடும்பம் வாக்கு தனம் என்று சொல்லக்கூடிய சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலமாக மகிழ்ச்சி ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். தனம் தானியம் இதெல்லாம் பெறக்கூடிய அமைப்புகள் உண்டாகும். சுய தொழில் லாபம் தொழில் முன்னேற்றம் வியாபாரம் பங்கு வர்த்தகம் ஆடை ஆபரணங்கள் வாங்குதல் இவைமட்டுமின்றி நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் தாம்பத்யம் இவை எல்லாமே இந்த மாதத்தில் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்புகள்.
மேஷ ராசி நேயர்களுக்கு ஏற்படும் பழைய கடன்கள் எல்லாம் நிவர்த்தியாகும். மூன்றாமிடத்தில் ராகு சஞ்சரிப்பதால் தாயார் உடல்நிலை சீராகும். வெளிநாட்டு யோகங்கள் வெளிநாட்டு பயணங்கள் நன்மையை தரும். வெளி நாட்டில் இருக்கக்கூடிய நல்ல செய்திகள் வரும். வெளிநாட்டுப் பொருட்கள் வாங்கக் கூடிய அமைப்புகள், மேலும் குழந்தைகள் சிறப்பாக படித்து கல்வியில் முன்னேற்றம் அடைய கூடிய ஒரு நல்ல மாதமாக இந்த மாதம் விளங்குகிறது. 9-ஆம் இடம் என்று சொல்லக்கூடியது பாக்ய ஸ்தானத்தில்; சனி, கேது அதனால் சுயதொழில் தனியாக செய்யக்கூடியவர்கள், வியாபாரம் கடை வைத்திருப்பவர்கள்,
இரும்பு வியாபாரம் செய்பவர்கள் நீதித் துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஆலய சம்பந்தமான வேலை செய்பவர்களுக்கு, குருக்கள் ஆன்மீக துறையில் வேலை செய்பவர்கள், ஜோதிடத் துறையில் இருக்கக்கூடியவர்கள் இவர்களுக்கு எல்லாம் சிறப்பான யோகங்கள் எல்லாம் ஏற்படக்கூடிய ஒரு நல்ல மாதமாக இந்த மாதம் விளங்குகிறது. 10-ஆம் இடம் தொழில் ஜீவன ஸ்தான குரு சேர்க்கை பார்ப்பான், பதவியை கெடுப்பான் அப்படிங்கிற இடத்தில் இருப்பதனால் செவ்வாயோடு சேர்ந்து இருப்பதால் பூமி சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு சிறுசிறு இடையூறுகள் ரியல் எஸ்டேட் பண்றவங்களுக்கு விவசாயிகள் இவர்களுக்கெல்லாம் மகசூல் கம்மியாக இருக்கும் அல்லது மகசூல் செய்த பொருட்களை கம்மி விலையில் விற்க வேண்டியிருக்கும்.
விற்க வேண்டிய சூழல் ஏற்படும். கடுமையான வீழ்ச்சி உண்டாகும். தொழில் கொஞ்சம் மந்தமாக இருக்கும். முருகப்பெருமானே பிரார்த்தனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார் குரு; வீட்டில் இது தனியார் துறையில் வேலை செய்பவர்கள் உடைய கணித துறை வங்கி இதெல்லாம் இருக்க கூடியவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு இதெல்லாம் ஏற்படும். உத்தியோக உயர்வு இதெல்லாம் கிடைக்கக்கூடிய அமைப்புகள் ஏற்படும். அக்கௌன்ட் டிபார்ட்மென்ட் துறையில் இருப்பவர்களுக்கும் பொதுவாக இந்த சித்திரை மாத பலன் நல்லதாகவே அமையும்.
மேஷ ராசியை பொறுத்த வரைக்கும் மிகச்சிறப்பாக இருக்கக்கூடிய அம்சமாக தான் இருக்கும். ஒரு 90% நன்மைகளை தரக்கூடிய அமைப்புகள் பெற்று இருக்கிறது. அதில் கல்வி பயிலக் கூடிய மாணவர்களுக்கு 80 சதவிகித நன்மைகள், கலைத்துறை, அரசியல்வாதிகள், பெண்கள் இவர்களுக்கு 85 சதவீத நன்மைகள், சுயதொழில், உத்தியோகம், வியாபாரம், விவசாயம் செய்பவர்களுக்கு 80 சதவீத நன்மைகள் ஏற்படக்கூடிய ஒரு நல்ல மாதமாக விளங்குகிறது.
இந்த மேஷ ராசி நேயர்கள் முக்கியமான பணிகளை தவிர்க்க வேண்டிய அந்த சந்திராஷ்டமம் என்றுபார்த்தோம்; என்றால் சார்வரி வருடம் சித்திரை மாதம் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி 4 நிமிடம் முதல் சித்திரை மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி 39 நிமிடம் வரை சந்திராஷ்டமம் சங்கரிக்க சந்திக்கிறது, எனவே அந்த நேரத்தில் முக்கியமான பணிகளை இறை வழிபாட்டை மேற்கொண்டால் அந்த இரண்டு தினங்களும் தங்களுக்கு சாதகமான நாளாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான வண்ணம் : சிகப்பு
அனுகூலமான திசை: கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 5
வணங்க வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்
முருகப் பெருமானை வழிபட்டு இந்த மாதத்தை ஒரு இனிமையான மாதமாக மாற்றிக்கொள்ளுங்கள்.