Categories
சினிமா தமிழ் சினிமா

‘சியான் 60 அப்டேட்’… படத்தில் இணைகிறாரா பிரபல நடிகை?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் விக்ரம் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கேஜிஎஃப் பட நடிகை ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . தமிழ், ஹிந்தி , தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த  திரைப்படம் தயாராகி வருகிறது.

Vikram and Simran | Couple photos, Vik, Photo

சமீபத்தில் கோப்ரா படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை கலக்கியது . இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துரு விக்ரம் இருவரும் இணைந்து சியான் 60 படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |