Categories
சினிமா தமிழ் சினிமா

‘சியான் 60’ படத்தில் இணைந்த இளம் நடிகை… படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சியான் 60 படத்தில் இளம் நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் பொன்னியின்  செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள சியான் 60 படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. நடிகர் விக்ரமுடன் இணைந்து அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரமும் இந்த படத்தில் நடிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், பாபிசிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இளம் நடிகை வாணி போஜன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Categories

Tech |