சென்னையில் காய்கறி விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டின் மூலம் தாறுமாறாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கே நடந்த சிறுசிறு அலட்சியங்கள் மூலமாக இந்த நோய்த் தொற்று பரவல் நிகழ்ந்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது.
ஆகையால் வருகின்ற 10ம் தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அளித்து வியாபாரிகள் சங்கத்தினர் உத்தரவிட்ட நிலையில், கோயம்பேடு மார்க்கெட் தொடர்ந்து மூடியிருப்பதால், காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்து உள்ளது. அதன்படி,
பெரிய வெங்காயம் ரூ 40 லிருந்து ரூபாய் 50 ஆகவும், ரூபாய் 40 லிருந்து 60 ஆகவும், உருளைக்கிழங்கு ரூபாய் 40 லிருந்து ரூபாய் 60 ஆகவும், கத்தரிக்காய் ரூபாய் 50 லிருந்து ரூபாய் 80ஆகவும், முட்டைக்கோஸ் ரூபாய் 80 ஆகவும், பீட்ரூட் ரூபாய் 80ஆகவும் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.