வியாபாரிகள் இல்லாமலே ஸ்மார்ட் கடைகள் அமைக்க குலுக்கல் நடத்தியதால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையை அழகாக காட்சி படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பாக கடற்கரை பகுதியில் ஸ்மார்ட் கடைகள் அமைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்துவந்த வியாபாரிகளுக்கு 60 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் 540 கடைகளும், புதிதாக வியாபாரம் செய்ய விரும்புபவர்களுக்கு 370 கடைகளும் என்று மொத்தமாக 900 கடைகள் அமைக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் மெரினா வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் வியாபாரிகளே இல்லாமல் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்பட்டது. எனவே வியாபாரம் செய்து வருபவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சியில் கூட்டத்திற்கு செல்லாமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.