Categories
கிரிக்கெட் விளையாட்டு

#TheHundredDraft…. “கெய்ல், மலிங்காவை எந்த அணியும் வாங்கவில்லை “… அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

கிறிஸ் கெய்ல் மற்றும் லசித் மலிங்கா  ஆகியோர் இங்கிலாந்தின் ‘100 பந்துகள்’ என்ற புதிய போட்டிக்கான, எந்த அணிகளாலும் எடுக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது.

இங்கிலாந்து நாட்டில் அடுத்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்படவுள்ள ‘100 பந்துகள்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் முதல் வீரராக அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

அதே போல் டி20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னர்களான வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் மற்றும் இலங்கை அணியின் லசித் மலிங்கா ஆகியோர் முதல் நாள் ஏலத்தில் எந்த அணிகளாலும் வாங்கப்படவில்லை.

Image result for chris gayle malinga

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸெல், ஆஸ்திரேலிய டி20 கேப்டன் ஆரோன் பின்ச், ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான், வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், மிட்சல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் முதல் நாள் ஏலத்தில் பல்வேறு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். அதிரடிக்கு பெயர் போன கெய்ல் மற்றும் யார்கர் மன்னன் லசித் மலிங்கா ஏலத்திற்கு வாங்கப்படாததால் ரசிகர்கள் கவலையிலும், அதிருப்தியிலும் உள்ளனர்.

 

Categories

Tech |