கிறிஸ் கெய்ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.
மேற்கிந்திய தீவுகள் விளையாட சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், தேர்வுக்குழு அவரது கோரிக்கையை நிராகரித்தது. மேலும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியை தேர்வுக் குழு அறிவித்துள்ளது. 39 வயதான கிறிஸ் கெய்ல் டெஸ்ட் போட்டியில் விளையாடி நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை 103 டெஸ்ட் போட்டியில் 15 சதங்கள் 37 அரை சதங்கள் உள்பட 7215 ரன்கள் குவித்துள்ளார்.