Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கிறிஸ்மஸ் பண்டிகை” இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்… சர்ச் பாதர்களுக்கு எச்சரிக்கை..!!

திருச்சியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மதம் சார்ந்த பல நிகழ்வுகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. மதம் சார்ந்த நிகழ்வுகளில் நடத்தப்படும் விழாக்களில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, தடுப்பு நடவடிக்கைகளையும், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி நடத்த வேண்டும். மேலும் திறந்த வெளி அரங்குகளில் நடத்தப்படவேண்டும். 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த அரசாணையை சுட்டிக்காட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் திருச்சி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் தேவாலயங்களில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் தின விழாக்கள் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அவ்வாறு நடத்தப்படும் திறந்த வெளி நிகழ்ச்சிகளில் 50 சதவீதம் மட்டுமே மக்கள் பங்கேற்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் முக்கியம் என்று தேவாலய பாதிரியார்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனுமதி பெறாமல் நடத்தப்படும் கிறிஸ்மஸ் விழா தடைசெய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |