Categories
அரசியல்

“உலக அமைதியை வலியுறுத்தி கிறிஸ்துமஸ் குடில் ஓவியம்”….. அசத்திய தூத்துக்குடி ஆசிரியர்…. குவியும் பாராட்டு….!!!!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள லசால் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வரும் இசிதோர் என்பவர் கடந்த 15 வருடங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கிறிஸ்துமஸ் குடிலை தன்னுடைய வீட்டில் அமைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது 20-ஆம் ஆண்டிலும் இவர் விழிப்புணர்வு குடிலை தன்னுடைய வீட்டில் அமைத்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போரினால் ஏற்பட்ட உலக அமைதியின்மை நீங்கி உலக நாடுகளுக்கு இடையே சகோதரத்துவத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடபாண்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார். ‌ அதோடு வறியோருக்கு உதவி செய்தல், அன்னதானம், கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம், போன்றவற்றை வலியுறுத்தி சில ஓவியங்களையும் வரைந்து உள்ளார். மேலும் இந்த குடிலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்தோடு வந்து பார்த்து செல்வதோடு, பலரும் ஆசிரியருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |