இங்கிலாந்து நாட்டில் வண்ணமயமான விளக்குகளோடு மிளிரும் கிறிஸ்துமஸ் ரயில் தன் சேவையை தொடங்கியுள்ளது.
உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். இதில், பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் தற்போதே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தொடங்கி விட்டனர். வீடுகளில் வண்ணமயமான ஒளிரும் விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள் போன்றவை வீதிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
அதன்படி இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பாக கிறிஸ்துமஸ் ரயில் கோலாகலமாக, வண்ணமயமான விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டு தன் பயணத்தை தொடங்கி இருக்கிறது. டார்ட்மவுத் நீராவி என்ற ரயில்வே நிறுவனத்திற்குரிய அந்த ரயில் வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இரவில் கண்களை பறிக்கும் வகையில் அழகாக அலங்கரிக்கப்பட்டு தண்டவாளங்களில் செல்லும் .
அதனை மக்கள் ஆர்வமுடன் பார்ப்பார்கள். இந்நிலையில் நேற்றிலிருந்து கிருஸ்துமஸ் ரயில் பயணிக்க தொடங்கி இருக்கிறது. இன்னும் ஐந்து வாரங்கள் தொடர்ந்து இந்த ரயிலில் மக்கள் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.