பாகிஸ்தானில் கிறிஸ்தவ பாதிரியார் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் வடமேற்கு பெஷாவர் நகரில் நேற்று தேவாலயத்தில் வழிபாடு முடிந்தவுடன் பாதிரியார் நயீம் பேட்ரிக், பிஷப் வில்லியம் சிராஜ் இருவரும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று இருவர் மீதும் மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தினர்.
இதில் கொலை பிஷப் வில்லியம் சிராஜ் பரிதாபமாக பலியானார். நயீம் பேட்ரிக் என்ற பாதிரியாருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மர்ம நபர்களை தேடிவருகிறார்கள். கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.