Categories
உலக செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பில் “பெற்றோர்களை இழந்த 176 குழந்தைகள்”தேவாலயம் கார்டினல் தகவல் …!!

இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21_ஆம் தேதி நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் நடந்த கொடூர  தொடர் குண்டுவெடிப்பு  தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 258 பேரின் உயிரை பறித்த இந்த கொடூர நிகழ்வில் 500_க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதை நிகழ்த்தியது தாங்கள் தான் என்று IS பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

Image result for இலங்கை குண்டு வெடிப்

இந்நிலையில் , இலங்கையின் கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் மால்கோல்ம் ரஞ்சித்  கடந்த வாரம் ரோம் நாட்டுக்கு சென்ற போது தெரிவித்த கருத்தில் , இலங்கையில் நடந்த கொடூர குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த குழந்தைகள் இயல்பு நிலையை எட்டுவதற்கான பணிகளை  தேவாலயம் மேற்கொண்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |