Categories
சினிமா தமிழ் சினிமா

வாயில் சிகரெட், கையில் கட்டு… அரவிந்த்சாமியின் புதிய பட டைட்டில் லுக்… வெளியிட்ட விஜய் சேதுபதி…!!!

அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராகவும், சாக்லேட் பாயாகவும் வலம் வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இதை தொடர்ந்து கடல் படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுத்த அவர் போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து மீண்டும் தனது மார்க்கெட்டை உயர்த்தினார்.

இப்போது அவர் சதுரங்க வேட்டை 2, நரகாசுரன், வணங்காமுடி, கள்ளபார்ட் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகிவரும் கள்ளபார்ட் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வித்தியாசமான கதையம்சம் கொண்டவையாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். நடிகர் அரவிந்த்சாமி வாயில் சிகரெட்டுடன் கையில் கட்டுடன் வித்தியாசமான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Categories

Tech |