Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2129 பேருக்கு கொரோனா வைரஸுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் மூலமாகவும் பரவி வருவதாக தெரிவித்த நிலையில் அந்நாட்டு அரசு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸுக்கு புதிதாக 2129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 43 பேர் வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு வந்தவர்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனாவின் வட கிழக்கே உள்ள ஜிலின் மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,750 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 4,307 பேர் கொரோனா தொற்றுக்கு குணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிதாக கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதிவாகாத நிலையில் இதுவரை 4 ஆயிரத்து 635 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் 27 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |