Categories
டென்னிஸ் விளையாட்டு

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் : ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவரேவ் …. சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்…!!!

சின்சினாட்டி ஓபன் டென்னிசில் ஆடவருக்கான பிரிவில் அலெக்சாண்டர் சுவரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவருக்கான இறுதி சுற்றுப் போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் சுவரேவ்,  ரஷ்யாவை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லேவை எதிர்கொண்டார். இதில் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே சுவரேவ் அதிரடியாக விளையாடினார்.

இதனால் முதல் செட்டை 6-2  என்ற கணக்கில் கைப்பற்றினார் . இதையடுத்து  2-வது செட்டிலும்  சிறப்பாக விளையாடிய சுவரேவ்  6-3 என்ற கணக்கில்  கைப்பற்றினார். இறுதியாக 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்ற அலெக்சாண்டர் சுவரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Categories

Tech |