Categories
சினிமா தமிழ் சினிமா

கொலைகாரியா?… பேயா?… குழப்பத்தில் ரசிகர்கள்… வெளியானது ராய் லட்சுமியின் ‘சின்ட்ரெல்லா’ டீஸர்..!!

கோலிவுட்டில் பேய்ப் படங்களுக்கான மவுசு இன்னும் குறையாமல் இருந்த வரும் நிலையில், கொலைகாரியா? பேயா? என்ற குழப்பத்தை ஏற்படுத்து விதமாக ராய் லட்சுமி நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ பட டீஸர் திகில் காட்சிகளுடன் அமைந்துள்ளது.

ராய் லட்சுமி மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ படத்தின் டீஸரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டில் உருவாகியுள்ள மற்றொரு பேய்ப் படமான சின்ட்ரெல்லாவை வினோ வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர். படத்துக்கு இசை – அஸ்வமித்ரா. ஒளிப்பதிவு – ராம்மி. தயாரிப்பு – எஸ்எஸ்ஐ புரொடக்‌ஷன்.

Image result for Cinderella - Moviebuff Teaser

திகில் படமான இதில் நடிகை ராய் லட்சுமி கதையின் நாயகியாக நடித்துள்ளார். நடிகை சாக்‌ஷி அகர்வால், ரோபோ சங்கர் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து படத்தின் டீஸரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர்.

Image result for Cinderella - Moviebuff Teaser

முழுக்க திகில் காட்சிகளுடனும், நடுங்க வைக்கும் ஒலியுடன் அமைந்திருந்த டீஸர் படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைகாரியா? பேயா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தும்விதமாக இருந்த ராய் லட்சுமி தோன்றும் காட்சிகளில் அவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |