அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் விஜய் கணேஷ், சித்திரகுப்தன், கிளிமூக்கு ராஜேந்திரன் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய காமெடி நடிகர் கிளிமூக்கு ராஜேந்திரன், ‘நாங்கள் எல்லாம் தற்போது உங்களிடம் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பதற்காக வந்துள்ளோம். நீங்கள் தவறான ஆட்களுக்கு ஓட்டுப் போட்டால் ஆளில்லாத ஊரில் டீக்கடை வைத்து டீ ஆற்றுவது போலாகும். தவறான ஆட்களை ஜெயிக்க வைத்தால் சாதிக்க முடியமா?’ எனக் கேள்வி எழுப்பியவர், ‘ ஏற்கனவே 39 எம்.பி.க்கள் சென்று சப்பாத்தி சாப்பிடுகின்றனர். அவர்களால் ஒன்னும் செய்யமுடியவில்லை’ என்றார்.