Categories
தேசிய செய்திகள்

சினிமா பாணியில் இருந்த ரவுடிகள்… மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம்…. இலங்கையில் பரபரப்பு…!

சினிமா ரவுடிகளை போல இருந்த 9 பேர் கொண்ட கும்பல் மாணவர்களை தாக்கி பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையிலுள்ள கம்பளை பேருந்து நிலையத்திற்கு வரும் பள்ளி மாணவர்களை ஒரு கும்பல் தாக்கி பணம் பறித்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 9 பேர் சேர்ந்த கும்பலில் இருந்தவர்கள் 19 -20 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும்,அவர்கள் காதுகளில் தோடுகளை அணிந்து தலைமுடிகளுக்கு வண்ணம் பூசி திரைப்பட ரவுடிகள் போல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரவுடி கும்பல் பள்ளி மாணவர்கள் மீது கொடூர தாக்குதலை மேற்கொண்டு பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் மாணவர்கள் பணம் கொடுக்காமல் பேருந்தில் ஏறி சென்றனர். அதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி கும்பல் மாணவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து கம்பளை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்

Categories

Tech |