Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சினிமா ஆசை” ரூ1,00,00,000….. 19 சொகுசு கார்…. திருவள்ளூர் அருகே மோசடி சம்பவம்…!!

திருவள்ளூரில் சினிமா நடிகர்களுக்கு கார் வாடகைக்கு தேவைப்படுவதாகக் கூறி எடுத்துச்சென்று ரூபாய் ஒன்றரை கோடி அளவில் மோசடி செய்து தலைமறைவாகிய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது  செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கார் உரிமையாளர்களை சந்தித்த மூன்று பேர் சினிமாகாகவும், தனியார் கம்பெனிகளுக்காகவும் கார் வாடகைக்கு வேண்டும் என்றும் நாளொன்றுக்கு 3 ஆயிரம் வாடகை தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 19 பேரிடம் காரை பெற்றுச் சென்றனர்.

சரியாக இரண்டு மாதங்களுக்கு வாடகையை செலுத்தி வந்தவர்கள் அதன்பின் செலுத்தாமல் விட்டதால் சந்தேகமடைந்து வாடகைக்கு பெற்று சென்றவர்களை தொடர்பு கொள்ள உரிமையாளர்கள் முயற்சித்தனர். அப்போது அவர்கள் தலைமறைவாகியது தெரியவர  காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது. புகாரை ஏற்ற அதிகாரிகள் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்கையில்,

காரை அடமானம் வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்து தலைமறைவாகியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அதிகாரிகள் குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்காக திருவள்ளூர் மாவட்ட பகுதிகளை சுற்றி நாள்தோறும் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது திருவள்ளூர் அண்ணா சிலை அருகே சொகுசு கார்கள் உடன் நின்று கொண்டிருந்த பரத் வெங்கடேசன் பிரவீன் ஜார்ஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில் அவர்கள் 3 பேரும் தான் மோசடியில் ஈடுபட்டது என்பது உறுதியானது. பின் அவர்களிடமிருந்து ரூபாய் ஒன்றரை கோடி மதிப்புள்ள 19 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |