Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி… சினிமா பாணியில் கடத்தல்… வெளியாகும் சிசிடிவி காட்சிகள்…!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் காதலியை காதலன் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், கிளாரிபேட்டே பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் தேவாங்கப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணை சென்ற இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால், பெண்ணின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொள்ள அப்பெண் முடிவு செய்துள்ளார்.

இதனிடையே, தனது நண்பரின் காரைப் பயன்படுத்தி அப்பெண்ணை சிவா கடத்தி இருக்கிறார். மக்கள் நடமாட்டம் அதிக அளவு இருக்கும் எம்பி சாலையில் இக்கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் கடத்தல் சம்பவம் முழுவதும் சிசிடிவியில் பதிவான நிலையில், அக்காட்சி தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Categories

Tech |