Categories
உலக செய்திகள்

சினிமா பாணியில் நடந்த சேஸிங் …. மடக்கி பிடித்த போலீசார் …. வெளியான பரபரப்பு வீடியோ காட்சி….!!!

குற்றவாளியை பிடிக்க போலீசார்  காரில் துரத்திச் சென்று பிடிக்கும் காட்சிகள்  இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் ஓக்லஹோமா என்ற இடத்தில் திருடன் ஒருவன் தப்பி செல்ல காரை வேகமாக ஓட்டி சென்று கொண்டிருந்தார். அந்தத் திருடனை பிடிப்பதற்காக அந்த காரை பின்தொடர்ந்து போலீசாரும் சென்றனர். அப்போது திருடனின் கார் மீது போலீசாரின்  காரை மோதச் செய்ததில் நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில்  நின்றது.

இதையடுத்து  காரில் இருந்த திருடனை போலீஸார் கைது செய்தனர்.மேலும் கைதான  ஜேம்ஸ் டெய்லி  என்ற நபர் எங்கு திருடினார் என்ற விவரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை .இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது .

Categories

Tech |