புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள கோவிலூர் பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். அவர் வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். இந்நிலையில் வீடு கட்டும் செலவிற்காக தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 1.4 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அவர் சைக்கிளில் வீடு திரும்பினார் .
அந்த சமயத்தில் முதியவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள் அவரை திசை திருப்புவதற்காக சாலையில் பத்து ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை கீழே போட்டுள்ளனர். அதனை எடுக்க முதியவர் சென்றபோது அவர் சைக்கிளில் வைத்திருந்த 1.4 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முதியவர் உடனே அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார்.
மேலும் இந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்து வந்த காவல்துறையினர் அருகில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் சென்ற 3 மர்ம நபர்கள் சைக்கிளில் வந்த முதியவரை பணத்தின் மூலமாக திசை திருப்பியுள்ளார். இந்த சம்பவம் சினிமா பாணியில் நடந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து முதியவரிடம் இருந்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.