சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் விபத்தில் சிக்கிய பெண்களுக்கு இழப்பீடு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள Rhode island என்ற இடத்தில் 2014ஆம் வருடம் சர்க்கஸ் ஒன்று நடைபெற்றுள்ளது. இதற்கான விளம்பரம் பெரிய அளவில் செய்யப்பட்டிருந்ததால் இந்த சர்க்கஸை காண மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்துள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. அப்போது அழகிய இளம்பெண்கள் எட்டு பேர் தங்களது தலைமுடிகளை மட்டும் கொக்கியில் இணைத்துவைத்து அதன் பலத்தில் சுமார் 20 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு பல ஆச்சரியங்களை நிகழ்த்த காத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் திரை விலக்கப்பட்ட அடுத்த நொடியே அப்பெண்கள் தொங்கியிருந்த கம்பியின் கொக்கி உடைந்து திடீரென கீழே விழுந்துள்ளனர். இந்நிகழ்ச்சியை காண கூடியிருந்த பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 4000 பேர் இதனை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளனர். இதை தொடர்ந்து உடனடியாக மருத்துவகுழு அப்பெண்களை மீட்டுள்ளார்கள். இச்சம்பவம் நடைபெற்று சுமார் 6 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அப்பெண்களுக்கு 52.5 மில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்க உள்ளனர். இந்த விபத்தால் அப்பெண்கள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனினும் இந்த இழப்பீடு பணத்தை பயன்படுத்தி நல்ல முறையில் சிகிச்சை செய்யலாம். மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் Svitlana balanchieva (22) மற்றும் Victoria maderies ஆகிய இருவர் கூறியுள்ளதாவது, “எப்போதும் நாங்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற ஆசையோடு தான் இருப்போம் குறிப்பாக குழந்தைகளுக்கு மகிழ்ச்சி கொடுக்க விரும்புவோம். ஆனால் இனிமேல் எங்களால் இதனை செய்ய முடியாது என்பதுதான் வருத்தமளிக்கிறது” என்று கூறியுள்ளார்கள்.