Categories
மாநில செய்திகள்

#BREAKING : குடியுரிமை சட்ட திருத்த மசோதா : திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த தாக்குதலை கண்டித்தும் மசோதாவுக்கு எதிராகவும் தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை  தெரிவித்து வருகின்றனர்.

Image

இந்நிலையில்  மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் திமுகவும் வழக்கு தொடர்ந்துள்ளது. அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை நடைபெற இருக்கிறது. திமுக சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |