குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை எதிர்த்து மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று மாநகர பகுதியான மேலப்பாளையத்தில் இருக்கக்கூடிய , இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போராட்டம் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
அதைத்தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 2000_த்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதோடு , கண்டன பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அதில் அனைத்து கட்சியும் பங்கேற்க வேண்டுமென்றும் அறைகூவல் விடுத்து கடையடைப்பு போராட்டம் நடந்து வருகின்றது.