சென்னையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட இருக்கும் பிரம்மாண்ட பேரணி தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லீம் லீக், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்யும்விதமாக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், கட்சியுடன் இணைந்து பொதுமக்களும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிரம்மாண்ட பேரணியை இன்று சென்னையில் மேற்கொள்ள உள்ளனர்.
பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணியில் கலந்து கொள்ள வருகை தந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்த நிலையில் பிரம்மாண்ட பேரணி தற்பொழுது நடைபெற தொடங்கியுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பேரணி நகர்ந்து செல்ல குடியுரிமை சட்டத்தை வாபஸ் வாங்க கோரி தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றன.