குடியுரிமை தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கேரள சட்டமன்றம் உட்பட எந்த ஒரு மாநில சட்டமன்றத்திற்கும் அதிகாரம் கிடையாது என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
குடியுரிமை சட்டத்தை அனைத்து மாநில அரசும் அமல்படுத்த வேண்டும் என்றும் அதனை மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை சட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் மாநிலங்களில் அமுல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
தற்போது இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். அதில் , இது சட்டப்படி செல்லாது என்றும், அனைத்து மாநில அரசுகளும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும், மீறினால் அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மாநிலங்களுக்கு என்று சில தனித்துவமான அதிகாரிங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.