நாங்கள் அரசியல் சார்பு உள்ளவர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் , தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மூலமாக இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருப்பவர்கள் யார் என்று பாருங்கள். பத்திரிக்கையாளர் ராம் , முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி , எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் , எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் , கல்வியாளர் கலைஞர் ரோகினி , பேராசிரியர் அருணன் ஆகியோர் சேர்ந்து அமைந்திருக்கக் கூடிய மேடையில் இவர்கள் அரசியல் சார்ந்தவர்களா ? இவர்களை நாங்கள் தூண்டி விட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
மக்கள் தொகை பதிவேடு இந்தியாவை பாதிக்கின்றது என்ற அச்சத்தின் காரணமாக தான் மக்கள் வீதிக்கு வந்திருக்கிறார். இந்த குடியுரிமை போராட்டம் என்பது முஸ்லீம் மக்களுக்கானது என்று சிலர் விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். இது இஸ்லாமியர்களை பாதுகாக்க மட்டும் அல்ல , இந்துக்களை பாதுகாக்க மட்டும் அல்ல மிகச் சரியாக சொல்வதென்றால் இந்தியர்களை பாதுகாக்கக்கூடிய போர் என்பதை மறந்துவிடக்கூடாது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.