Categories
Uncategorized மாநில செய்திகள்

இறுதி கட்டத்தில் குடிமராமத்து பணிகள் – ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு!

வரும் 12ம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி இதன் மூலம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. மேட்டூர் அணையை பொறுத்தவரை போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ள நிலையில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி வரும் 12ம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். 12ம் தேதி காலை 10 மணிக்கு முதலமைச்சர் நேரில் சென்று அணையை திறக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அணையில் இருந்து திறக்கும் தண்ணீர் கடைமடை வரை செல்ல குடிமராமத்து பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. அந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கென 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.7 67 அடியாக உள்ளது, நீர் இருப்பு 67 டிஎம்சி, நீர் வரத்து 1,451 கன அடி, குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |