உள்நாட்டு யுத்தம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது என பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு கடிதம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்சியை கைப்பற்றுவோம் என பிரான்ஸ் ஓய்வு பெற்ற ஜெனரல் உட்பட இராணுவ வீரர்கள் பலர் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கடிதம் ஓன்றை எழுதி இருந்தனர். அந்த கடிதத்தில் உள்நாட்டு யுத்தம் ஒன்று வெடிக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த கடிதத்தில்தான் ஜெனரல் உட்பட ஓய்வுபெற்ற ராணுவத்தினரின் பதவி பறிப்பு, ஓய்வூதியம் நிறுத்தம் என பல நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக மூத்த ராணுவ அதிகாரிகள் மிரட்டல் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் ராணுவத்தில் தற்போது பணியிலிருக்கும் வீரர்கள் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் சுமார் 93 ஆயிரம் பொதுமக்களும் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. அந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது “நாங்கள் பக்கத்து நாட்டின் மீது போர் தொடுத்து அதை கைப்பற்ற சொல்லவில்லை. நாங்கள் நமது நாட்டை காப்பாற்றுவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் சென்றமுறை அனுப்பிய கடிதத்தில் கையெழுத்திடவர்கள் மிரட்டப்பட்டுள்ளதால் இம்முறை யார் யார் கையெழுத்திட்டனர் என்பதைக் குறிப்பிடாமல் கையெழுத்திட்டிருக்கிறோம்” என கூறியுள்ளார். மேலும் இது குறித்து உள்துறை அமைச்சரான Gerald Darmanin கூறும்போது இது ஒரு அரைவேக்காட்டுத்தனம் என்றும் கையெழுத்திட்டுவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாததால் அவர்கள் கோழைகள் என்றும் விமர்சித்துள்ளார்.