தேசிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தலைவர் பூனம் சக்சேனா ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சட்டப்படிப்புகளுக்கான கிளாட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டும்தான் சட்டப் படிப்பில் சேர முடியும். 2023-24 ஆம் ஆண்டுக்கான கிளாட் நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் நவம்பர் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு https://consortiumofnlus.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இதனையடுத்து தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் பொது பிரிவினர் ரூ. 4000 கட்டணமும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ. 3500 கட்டணமும் செலுத்த வேண்டும். கிளாட் நுழைவுத் தேர்வு 2 மணி நேரம் நடைபெறும் நிலையில், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களை https://consortiumofnlus.ac.in இணையதள பக்கத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்