FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி இந்த வருடம் கத்தாரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டியானது ஆசிய நாட்டின் நடப்பு சாம்பியனான கத்தார் நாட்டில் அல்கோர் நகரில் 60 இருக்கைகள் கொண்ட அல்பேட் என்னும் ஸ்டேடியத்தில் முதல் ஆட்டம் நடைபெற உள்ளது. மேலும் போட்டிகள் நடைபெறவிருக்கும் 8 மைதானங்களும் தோஹாவிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன. ரசிகர்களும் வீரர்களும் அதிகாரிகளும் போட்டிக்கு சம்பந்தப்பட்ட அனைவருமே ஒரே இடத்தில் தங்கும் வசதி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியானது டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று தான் கத்தார் நாட்டின் தேசிய தினம் ஆகும். சுமார் 80 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட லூசைல் ஸ்டேடியத்தில் இந்த இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் போட்டியின் நேரம் அதிகரிக்கப்படுவதாகவும் போட்டி தொடர்பான விதிகளை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வதந்திகள் சமீபத்தில் பரவி வந்தது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து FIFA அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் போட்டியின் நேரம் நீட்டிப்பது, போட்டியின் விதிகள் மாற்றப்படுவது உள்ளிட்டவை முற்றிலும் வதந்திகளே ஆகும். ஆகையால் யாரும் போட்டி தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.