Categories
சென்னை மாநில செய்திகள்

இதையெல்லாம் கிளீன் பண்ணுங்க….. பொதுமக்களுக்கு…. மாநகராட்சி வேண்டுகோள்….!!

பொதுமக்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்குக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

தற்போது கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் நுண்ணுயிரிகள் தாக்கம் அதிகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் நமது வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே போதும். அதன்படி பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது.  அதில், நாம் நாள்தோறும் கை வைத்து பயன்படுத்தும் பொருட்களான,

கதவின் வெளிப்புற கைப்பிடி உள்புற கைப்பிடி, செல்போன், டிவி, ரிமோட் , கீ போர்டு, லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் இன் கீபோர்டு இரு சக்கர வாகனத்தின் கைப்பிடி ஆகியவற்றை சிறிதளவு சோப்பு கலந்த தண்ணீரால் அல்லது கிருமிநாசினி கலந்த தண்ணீரால் சுத்தம் செய்து வர வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நாம் அவற்றை தொடும் போது அதன் கிருமிகள் நம்மை அண்டாது. நமக்கு நோய் தொற்று ஏற்படாது. அதே சமயத்தில் அவற்றை கிளீன் செய்து முடித்த பின்பும் கூட அடிக்கடி கை கழுவுவது இது மாதிரியான நேரங்களில் நல்லது.

Categories

Tech |